/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வரும் 8ம் தேதி பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்
/
வரும் 8ம் தேதி பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்
ADDED : நவ 05, 2025 08:07 PM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, அரசு மேல்நிலைப்பள்ளியில் வரும் 8ம் தேதி, பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது.
கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம், வரும் 8ம் தேதி நடக்கிறது. முகாமில், நீரழிவு நோய், ரத்த அழுத்தம், பல் மற்றும் கண் மருத்துவம், மனநலம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் எலும்பு மூட்டு சிகிச்சை, தோல் மருத்துவம் சித்த மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மருத்துவ பரிசோதனை நடக்கிறது.
மேலும், ரத்தம், சளி மற்றும் சிறுநீர் எச்.ஐ.வி., பரிசோதனைகள் செய்யப்படுகிறது. மாற்றத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழ்களும், மருத்துவ காப்பீடு அட்டையும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள், காப்பீடு அட்டை பெற, மொபைல்போனில் இணைக்கப்பட்ட ஆதார் மற்றும் ரேஷன் கார்டு போன்ற ஆவணங்களை கொண்டு வர வேண்டும்.

