/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பள்ளிகளின் பாராட்டு விழா
/
கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பள்ளிகளின் பாராட்டு விழா
கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பள்ளிகளின் பாராட்டு விழா
கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பள்ளிகளின் பாராட்டு விழா
ADDED : நவ 05, 2025 08:07 PM

வால்பாறை: வால்பாறை ஒன்றிய குறுவள மையம் அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் கடந்த, செப்., மாதம் நடந்தன. அதனை தொடர்ந்து கடந்த மாதம், வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் அரசு கல்லுாரியில் நடைபெற்றன.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்றனர். மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை சார்பில் கோவை ஹிந்துஸ்தான் கல்லுாரியில் நடந்தது.
இதில், மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
* வால்பாறை நிதியுதவி பெறும் துாய இருதய ஆரம்ப பள்ளியில் நான்காம் வகுப்பு மாணவி தர்ஷிகா ஓவியர் வரைதல் மற்றும் வண்ணம் தீட்டுதல் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று, மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். 2ம் வகுப்பு மாணவி வைசாலினி வண்ணம் தீட்டுதல் போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தை பெற்று, மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். மாணவியரை தலைமை ஆசிரியர் அன்பரசி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி பரிசு வழங்கினர்.
* உருளிக்கல் மேல்பிரட்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி 4ம் வகுப்பு மாணவி கவுஸ்ரீநிலா திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தை வென்றார். தலைமை ஆசிரியர் சந்திரா மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
* லோயர் ேஷக்கல்முடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவியர் ஹரிஷ்ஸ்ரீ, ப்ரீத்தி, ரித்திகாஸ்ரீ, ஜோஸ்னி ஆகியோர் பரதநாட்டிய போட்டியில் மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தை பிடித்தனர். மாணவியருக்கு தலைமை ஆசிரியர் விஜயா மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

