/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொசுத்தொல்லை தாங்க முடியல நகராட்சி நடவடிக்கை அவசியம்
/
கொசுத்தொல்லை தாங்க முடியல நகராட்சி நடவடிக்கை அவசியம்
கொசுத்தொல்லை தாங்க முடியல நகராட்சி நடவடிக்கை அவசியம்
கொசுத்தொல்லை தாங்க முடியல நகராட்சி நடவடிக்கை அவசியம்
ADDED : மார் 13, 2024 10:52 PM
உடுமலை, - உடுமலை நகரில் கொசுத்தொல்லையை கட்டுபடுத்த, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை என, பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
உடுமலை நகரில், 33 வார்டுகள் உள்ளன. பருவ நிலை மாற்றங்களின் போதும், கொசுத்தொல்லையால் நோய்த்தொற்று அதிகரிக்கும் நிலைகளிலும், அவற்றை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஆனால் நகரின் குடியிருப்பு பகுதிகளிலும், பிரதானமான பொதுமக்கள் அதிகம் வந்துசெல்லும் கடைவீதிகளிலும், நோய்த்தடுப்புக்கான நடவடிக்கை மேற்கொள்வதில், நகராட்சி நிர்வாகம் அலட்சியமாக உள்ளது.
குடியிருப்புகளில் சாக்கடை கால்வாய்கள் முழுமையாக துார்வாரப்படுவதில்லை.
கொசுப்புழு அதிகரிப்பை கட்டுப்படுத்த புகைமருந்து, தண்ணீர் தொட்டிகளுக்கு மருந்து தெளிக்கும் நடவடிக்கைகள், பெயரளவில் மிக சில பகுதிகளில் மட்டுமே நடக்கிறது.
நகராட்சி நிர்வாகம், நோய்த்தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்ட வேண்டுமென, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

