/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிநீரை காய்ச்சி குடிக்கவும் நகராட்சி கமிஷனர் அறிவுரை
/
குடிநீரை காய்ச்சி குடிக்கவும் நகராட்சி கமிஷனர் அறிவுரை
குடிநீரை காய்ச்சி குடிக்கவும் நகராட்சி கமிஷனர் அறிவுரை
குடிநீரை காய்ச்சி குடிக்கவும் நகராட்சி கமிஷனர் அறிவுரை
ADDED : மே 26, 2025 10:49 PM
பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி நகராட்சி உட்பட்ட பகுதிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகிக்கப்பட்டாலும், அதனை நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி நகராட்சி கமிஷனர் கணேசன் அறிக்கை:
நகராட்சிக்கு உட்பட்ட மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கும் பொருட்டு, ஆழியாறு மற்றும் பாலாறு சங்கமிக்கும் அம்பராம்பாளையத்தில், தலைமை நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆற்றில் இருந்து, தண்ணீர் எடுக்கப்பட்டு முறையாக சுத்திகரிக்கப்பட்டு நகரில் அமைக்கப்பட்டுள்ளது நீருந்து நிலையம் வாயிலாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
தற்போது பெய்யும் மழை காரணமாக, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் செந்நிறமாக செல்கிறது. அதனை குடிப்பதற்கு ஏதுவாக, தேவையான அளவு ஆலம் மற்றும் குளோரின் சேர்த்து சுத்திகரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட குடிநீராக விநியோகிக்கப்படுகிறது. இருப்பினும், மக்கள் அனைவரும் குடிநீரை நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.