/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வரி செலுத்தினால் சலுகை; நகராட்சி கமிஷனர் அறிவிப்பு
/
வரி செலுத்தினால் சலுகை; நகராட்சி கமிஷனர் அறிவிப்பு
வரி செலுத்தினால் சலுகை; நகராட்சி கமிஷனர் அறிவிப்பு
வரி செலுத்தினால் சலுகை; நகராட்சி கமிஷனர் அறிவிப்பு
ADDED : ஏப் 23, 2025 12:34 AM
பொள்ளாச்சி,; பொள்ளாச்சி நகராட்சியில், 'சொத்துவரியை வரும், 30ம் தேதிக்குள் செலுத்துபவர்களுக்கு, சொத்து வரியில் ஊக்கத்தொகை வழங்கப்படும்,' என, நகராட்சி கமிஷனர் கணேசன் தெரிவித்தார்.
பொள்ளாச்சி நகராட்சியில், 1.26 லட்சம் பேர் வசிக்கின்றனர். சொத்து வரி, காலி மனை வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, குப்பை சேவை கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் உள்ளிட்டவை வசூலிக்கப்படுகிறது.
கடந்தாண்டு, வரி வசூல் பணிகள் தீவிரமாக நடந்தது. சொத்துவரி செலுத்தாவிட்டால், குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி நோட்டீஸ் ஒட்டுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதனால், சொத்துவரி, 100 சதவீதம் வசூலானது.
இந்நிலையில், 2025 - 26ம் ஆண்டுக்கான சொத்துவரியை வசூலிக்கும் பொருட்டு இப்போதே நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது. அதனால், வரும், 30ம் தேதிக்குள் வரியினங்களை நிலுவையின்றி செலுத்தினால் ஊக்கத்தொகை வழங்கப்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
பொள்ளாச்சி நகராட்சி கமிஷனர் கணேசன் கூறியதாவது:
பொள்ளாச்சி நகராட்சி, 2025 - 26ம் ஆண்டுக்கான சொத்து வரியை வரும், 30ம் தேதிக்குள் செலுத்துபவர்களுக்கு சொத்து வரியில், ஐந்து சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். எனவே, பொதுமக்கள் வாய்ப்பை பயன்படுத்தி சொத்து வரியை உடனடியாக செலுத்தி பயன்பெறலாம்.
மேலும்,https.tnurbanepay.tn.gov.inஎன்ற இணையதளத்திலும், 'ஜிபே' வில் உள்ள Municipal Tax/ Services-யில் உள்ள TNURBAN esevai Municipal Taxes என்ற முகவரியிலும் சொத்து வரியை செலுத்தி ஊக்கத்தொகையினை பெறலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.