/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாதாள சாக்கடையில் திடக்கழிவு வெளியேற்றினால் நடவடிக்கை: நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை
/
பாதாள சாக்கடையில் திடக்கழிவு வெளியேற்றினால் நடவடிக்கை: நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை
பாதாள சாக்கடையில் திடக்கழிவு வெளியேற்றினால் நடவடிக்கை: நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை
பாதாள சாக்கடையில் திடக்கழிவு வெளியேற்றினால் நடவடிக்கை: நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை
ADDED : நவ 13, 2025 09:55 PM
பொள்ளாச்சி: ''பாதாள சாக்கடையில், பிளாஸ்டிக் உள்ளிட்ட திடக்கழிவுகளை போட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம், 170.226 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட்டது.
இத்திட்டம், ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 7,400 பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மரப்பேட்டை பள்ளம், மாட்டு சந்தை, ராஜாராமன் லே-அவுட்டில் கழிவுநீர் உந்து நிலையங்களும், 18 இடங்களில் கழிவு நீரேற்று நிலையங்களும் அமைக்கப்பட்டன.
மாட்டு சந்தையில், தினமும், 11.25 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு செய்யும் வகையில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழிகளில் இருந்து கழிவுநீர் வெளியேறி ரோடுகளில் செல்கிறது. இது குறித்து நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்த போது, பிளாஸ்டிக் கழிவுகள், நாப்கின் போன்ற கழிவுப்பொருட்கள் பாதாள சாக்கடையில் இருப்பது கண்டறியப்பட்டது.
மேலும், ஹோட்டல் கழிவுகள், திடக்கழிவுகள் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறுவது தெரியவந்தது.
எனவே, கழிவுகளை பாதாள சாக்கடை திட்ட குழாயில் இதுபோன்ற கழிவுகளை வெளியேற்றக்கூடாது, என நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நகராட்சி கமிஷனர் குமரன் கூறியதாவது:
பாதாள சாக்கடை திட்டத்தில், வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்படுகிறது. வீடுகளில் உள்ள கழிவறைகளில் பிளாஸ்டிக் கவர்கள், பேம்பர்ஸ், நாப்கின் மற்றும் திடக்கழிவு பொருட்களை போடுவதால் அடைப்பு ஏற்படுகறது.
அதே போன்று, ேஹாட்டல்கள், வணிக நிறுவனங்கள், திடக்கழிவுகளை பாதாள சாக்கடை குழாயில் வெளியேற்றுவதால் அடைப்பு ஏற்படுகிறது. இதுபோன்று செயல்களில் ஈடுபடக்கூடாது. திட்டம் முறையாக செயல்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
கழிவுகளை மீண்டும் குழிகளில் போட்டால், சுகாதார விதிகளின் படி வீடு, வணிக நிறுவனங்கள், ேஹாட்டல்கள் மீது அபராதம் விதிப்பு, கழிவுநீர் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

