/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிநீர் குழாய் உடைப்பு: சீரமைப்பு பணிகள் தீவிரம்
/
குடிநீர் குழாய் உடைப்பு: சீரமைப்பு பணிகள் தீவிரம்
குடிநீர் குழாய் உடைப்பு: சீரமைப்பு பணிகள் தீவிரம்
குடிநீர் குழாய் உடைப்பு: சீரமைப்பு பணிகள் தீவிரம்
ADDED : நவ 13, 2025 09:55 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகரில், குடிநீர் குழாய் உடைப்பு சீரமைக்கும் பணியில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி நகராட்சிக்கு, அம்பராம்பாளையம் அருகே, ஆழியாறு ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு, சுத்திகரிக்கப்படுகிறது. நகராட்சி நீரேற்று நிலையத்தில் இருந்து, குடிநீர் எடுக்கப்பட்டு மார்க்கெட் ரோட்டில் உள்ள நீர் உந்து நிலையம் வாயிலாக வினியோகிக்கப்படுகிறது.
இதில், ஒன்பது உயர் மட்ட குடிநீர் தேக்க தொட்டி, இரண்டு தரைமட்ட நீர் தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. நகரில், 17,650 குடிநீர் வீட்டு இணைப்புகளும், 198 பொது இணைப்புகளும் உள்ளன. இது மட்டுமின்றி மற்ற பயன்பாட்டுக்கு தனியாக போர்வெல் தண்ணீரும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு நகராட்சி அலுவலகம் அருகே குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணானது.
இதையடுத்து, நகராட்சி அதிகாரிகள், குடிநீர் வினியோகத்தை நிறுத் தம் செய்து, குழாய் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.
நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'வெங்கடேசா காலனி குடிநீர் தொட்டியில் இருந்து எஸ்.வி.நாயுடு வீதிக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. நெடுஞ்சாலைத்துறை ரோடு என்பதால் அனுமதி பெறப்பட்டு, சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது,' என்றனர்.

