/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளக்ஸ் அகற்றாவிட்டால் குற்றவியல் நடவடிக்கை; நகராட்சி கமிஷனர் அறிவிப்பு
/
பிளக்ஸ் அகற்றாவிட்டால் குற்றவியல் நடவடிக்கை; நகராட்சி கமிஷனர் அறிவிப்பு
பிளக்ஸ் அகற்றாவிட்டால் குற்றவியல் நடவடிக்கை; நகராட்சி கமிஷனர் அறிவிப்பு
பிளக்ஸ் அகற்றாவிட்டால் குற்றவியல் நடவடிக்கை; நகராட்சி கமிஷனர் அறிவிப்பு
ADDED : டிச 19, 2025 07:09 AM
பொள்ளாச்சி: 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் பிளக்ஸ் வைத்தோர் அகற்றாவிட்டால், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும், என,நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், அரசியல் கட்சியினர் மற்றும் பலர், பிளக்ஸ்கள் அதிகளவு வைத்துள்ளனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், பிளக்ஸ் வைப்பதால், விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
இதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, 'தினமலர்' நாளிதழில், நேற்று படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, பிளக்ஸ் வைத்தோருக்கு, நகராட்சி வாயிலாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி நகராட்சி கமிஷனர் குமரன் அறிக்கை:
நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனைத்து கட்சியினரால், கோவை ரோடு, உடுமலை ரோடு, ராஜாமில் ரோடு, நேதாஜி ரோடு, மார்க்கெட்ரோ டு, வெங்கட்ரமணன் வீதி, பாலக்காடு ரோடு, நகராட்சி அலுவலக ரோடு, காந்தி சிலை ரவுண்டானா, தாலுகா அலுவலகம், புதிய, பழைய பஸ் ஸ்டாண்ட், மீன்கரை ரோடு சுண்ணாம்பு கால்வாய், தெப்பக்குளம் வீதி, கோட்டூர் ரோடு, பல்லடம் ரோடு பகுதிகளில், பிளக்ஸ் வைக்கப்பட்டுள்ளன.
நகராட்சிக்கு சொந்தமான இடங்கள், அரசுக்கு சொந்தமான இடங்களில் விளம்பர பதாகைகள், பிளக்ஸ் மற்றும் விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளன.நகராட்சி பகுதிகளில் அனைத்து கட்சியினரால் போஸ்டர் மற்றும் சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. அனுமதியற்ற விளம்பரங்களை நிறுவுவது, தமிழ்நாடு திறந்தவெளி இடங்கள் (சிதைவதை தடுத்தல்) சட்டம், 1959ன் படி குற்றமாகும் என அனைத்து கட்சியினருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிநபர் மற்றும் நிறுவனங்களால் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகள், அனைத்து வகையான விளம்பரங்கள், அனைத்து கட்சியினரால் நிறுவப்பட்ட விளம்பர பதாகைகள் மற்றும் விளம்பரங்களையும், 24 மணி நேரத்துக்குள் தாங்களாக முன்வந்து அகற்ற வேண்டும்.
இது குறித்து, நகராட்சி வாயிலாக அனைத்து கட்சியினருக்கும் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
விளம்பர பதாகைகளை அகற்றாத பட்சத்தில் நகராட்சியின் வாயிலாக விளம்பரங்கள் அகற்றப்படுவதுடன், அனைத்து கட்சியினர் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது போலீசார் வாயிலாக குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

