/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குப்பை மேலாண்மைக்கு சவாலாகும் 'பல்க் வேஸ்ட்' கடும் நடவடிக்கை பாயும் என மாநகராட்சி எச்சரிக்கை
/
குப்பை மேலாண்மைக்கு சவாலாகும் 'பல்க் வேஸ்ட்' கடும் நடவடிக்கை பாயும் என மாநகராட்சி எச்சரிக்கை
குப்பை மேலாண்மைக்கு சவாலாகும் 'பல்க் வேஸ்ட்' கடும் நடவடிக்கை பாயும் என மாநகராட்சி எச்சரிக்கை
குப்பை மேலாண்மைக்கு சவாலாகும் 'பல்க் வேஸ்ட்' கடும் நடவடிக்கை பாயும் என மாநகராட்சி எச்சரிக்கை
ADDED : பிப் 08, 2024 10:40 PM
கோவை, - அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்டவற்றில் விதிமீறி 'பல்க் வேஸ்ட்' பெறுவது, வெள்ளலுார் கிடங்கில் தேக்கத்தை கூட்டுவதுடன், குப்பை மேலாண்மைக்கும்சவாலாக மாறியுள்ளது.
கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கும் குப்பை, மக்காதது என, தினமும், 1,250 டன் வரையிலான குப்பை சேகாரமாகிறது. இக்குப்பையானது, வெள்ளலுார் குப்பை கிடங்கில் பல ஆண்டுகளாக மலை போல் குவிக்கப்பட்டது.
இதனால், அப்பகுதி மக்கள்துர்நாற்றம், ஈ தொல்லை போன்ற சுகாதார சீர்கேடு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். வெள்ளலுாரில் இருந்து சுந்தராபுரம் தாண்டி பாதிப்புகள் பரவலாகி வருகிறது. பிரச்னைபசுமை தீர்ப்பாயம் வரை சென்று விசாரணையும் நடந்து வருகிறது.
தற்போது குப்பை சேகரிப்பு பணிகளை, தனியார் மேற்கொண்டு வருகின்றனர். இச்சூழலில், குப்பை தேக்கம்நாளுக்கு நாள் அதிகரிப்பதால், மீண்டும் மாநகராட்சியே குப்பை மேலாண்மை செய்ய கவுன்சிலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, 'பல்க் வேஸ்ட்' எனப்படும் மொத்த கழிவு உற்பத்தியும், வெள்ளலுார் கிடங்கு பிரச்னைக்கு தீர்வு காண்பதில் முட்டுக்கட்டையாக உள்ளது. மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகளின்படி, தினமும், 100 கிலோவுக்கு மேல் உருவாக்குபவர்களே, அக்கழிவுகளை மேலாண்மை செய்ய வேண்டும். ஆனால், துாய்மை பணியாளர்கள் சிலர், ஓட்டல்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றில் பணம் வாங்கிக்கொண்டு 'பல்க் வேஸ்ட்' பெறுவது குப்பை மேலாண்மைக்கு தலைவலியாக உள்ளது.
கவுன்சிலர்கள் கூறுகையில், 'காந்திபுரம், சுந்தராபுரம், திருச்சி ரோடு ஐயர் ஹாஸ்பிட்டல் ஸ்டாப் அருகே என, ஓட்டல்கள் இருக்கும் இடங்களில் இரவு நேரங்கில் துாய்மை பணியாளர்கள் 'பல்க் வேஸ்ட்' வாங்குகின்றனர். தனியார் வாகனங்களில் இருந்தும் மாநகராட்சி வாகனங்களுக்கு இந்த குப்பை மாற்றப்படுகிறது' என்றனர்.
கடந்த மன்ற கூட்டத்தில் இந்த விஷயத்தில் கவுன்சிலர்கள் கொந்தளிக்க, விதிமீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கமிஷனர் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

