/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நுாற்றாண்டு விழாவுக்கு தயாராகும் நகராட்சி பள்ளி
/
நுாற்றாண்டு விழாவுக்கு தயாராகும் நகராட்சி பள்ளி
ADDED : மார் 19, 2025 08:19 PM
பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி நகராட்சி நடுநிலைப்பள்ளியில், நுாற்றாண்டு விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
பொள்ளாச்சி, தெப்பக்குளம் பகுதியில், ஆங்கிலேயர் காலத்தில், 1921ம் ஆண்டு நகராட்சி துவக்கப்பள்ளி துவங்கப்பட்டது. இப்பள்ளி, நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
பள்ளியில் படித்த மாணவர்கள், பல்வேறு பதவிகளில் உள்ளனர். வெளிநாடுகளிலும் பணியாற்றி வருகின்றனர்.இந்நிலையில், இப்பள்ளியில், நுாற்றாண்டு விழாவை கொண்டாட பள்ளி நிர்வாகம், முன்னாள் மாணவர்கள் என அனைவரும் இணைந்து திட்டமிட்டனர்.
பள்ளி நுாற்றாண்டு விழா, ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா என முப்பெரும் விழாவாக வரும், 21ம் தேதி நடக்கிறது. இதற்காக பள்ளி வளாகம் முழுவதும், வண்ணம் பூசப்பட்டு புதுப்பிக்கும் பணிகள் நடக்கின்றன. புதர் அகற்றப்பட்டு மைதானம் துாய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.