/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வளர்ச்சிப்பணிகளில் அக்கறை காட்டாத நகராட்சி! தி.மு.க., கவுன்சிலர்கள் ஆவேசம்
/
வளர்ச்சிப்பணிகளில் அக்கறை காட்டாத நகராட்சி! தி.மு.க., கவுன்சிலர்கள் ஆவேசம்
வளர்ச்சிப்பணிகளில் அக்கறை காட்டாத நகராட்சி! தி.மு.க., கவுன்சிலர்கள் ஆவேசம்
வளர்ச்சிப்பணிகளில் அக்கறை காட்டாத நகராட்சி! தி.மு.க., கவுன்சிலர்கள் ஆவேசம்
ADDED : நவ 29, 2024 11:31 PM

வால்பாறை: வளர்ச்சிப் பணிகளில் போதிய அக்கறை காட்டாததால், மக்களிடம் பதில் கூற முடியவில்லை என, தி.மு.க., கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வால்பாறை நகராட்சி கூட்டம் தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமையில் நடந்தது. கூட்டத்துக்கு நகராட்சி கமிஷனர் ராகுராமன், சுகாதார அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் செந்தில்குமார் வரவேற்றார்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசுகையில், 'வால்பாறை நகர் பகுதியில் மட்மே வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எஸ்டேட் பகுதியில் தெருவிளக்கு கூட முறையாக பராமரிப்பதில்லை.
வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த எஸ்டேட் பகுதியில் கூடுதல் தெருவிளக்கு அமைப்பதோடு, கரடு, முரடான ரோட்டையும் சீரமைக்க வேண்டும். வார்டுகளில் அடிப்படை வசதிகள் செய்து தர நகராட்சி நிர்வாகம் ஏன் தயக்கம் காட்டுகிறது,' என்றனர்.
ரவிசந்திரன், மகுடீஸ்வரன் (தி.மு.க.,): வால்பாறை நகராட்சியில் எந்த வளர்ச்சிப்பணியும் முறையாக நடப்பதில்லை. கவுன்சிலராகி மூன்று ஆண்டுகளாச்சு, வார்டில் எந்த வேலையும் நடக்கவில்லை. அமைச்சரை நேரில் சந்தித்து வளர்ச்சிப்பணிகளை வேகப்படுத்த வேண்டும். வளர்ச்சிப்பணிகள் நடக்காததால், வரும் தேர்தலில் மக்களிடம் எப்படி ஓட்டு கேட்பது. தலைவரால் முடியாவிட்டால் பதவியை ராஜினாமா செய்துவிடுங்கள்.
தலைவர்: நான் எதுக்கு ராஜினாமா செய்ய வேண்டும். எல்லா வார்டிலும் வளர்ச்சிப்பணிகள் முறையாக நடக்கிறது. சில வார்டுகளில் கிடப்பில் உள்ள பணிகளும் விரைவில் செய்யப்படும். மக்களின் பிரச்னைகளை கேட்டறிந்து, உடனடியாக தீர்வு காண்கிறேன். மன்றக்கூட்டத்தில் தேவையில்லாமல் பேசுவதை தவிர்க்க வேண்டும்.
காமாட்சி: எனது வார்டு பக்கம் போய் எட்டிப்பாருங்க, ஒரு வேலையும் நடக்கலை. திட்டமிட்டு, 10வது வார்டை புறக்கணிக்கறீங்க. மக்களின் கேள்விகளுக்கு என்னால் பதில் கூற முடியவில்லை. ஜீப்பில் போயிட்டு வர்ற உங்களுக்கு மக்கள் பிரச்னை எப்படி தெரியும்.
தலைவர்: அனைத்து வார்டுகளுக்கும் நேரடியாக சென்று மக்கள் பிரச்னைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கிறேன். உங்களது வார்டிலும் வளர்ச்சிப்பணிகள் நடைபெற்று வருகிறது. நீங்க முதல்ல வார்டுக்குள்ள போய் பாருங்க.
கவுன்சிலர்கள் - தலைவர் மோதலால் மன்றக்கூட்டம் கடைசி வரை காரசாரமாகவே நடந்தது. வரிசை எண் கூட படிக்காமலேயே அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

