ADDED : மார் 31, 2026 06:23 PM

சூலூர்: கண்ணம்பாளையத்தில் கோவிலை இடித்து தரைமட்டமாக்கிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட கலங்கல் ரோட்டில் வெள்ளை முனியப்பன் கோவில் உள்ளது. பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் எல்லை காவல் தெய்வமாக வழிபட்டு வந்தனர். சமீபத்தில் சுற்று சுவர் கட்டப்பட்டது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன், கோவிலில் இருந்த குதிரை சிலைகள் சேதப்படுத்தப்பட்டன. இதுகுறித்து பக்தர்கள் சூலூர் போலீசில் புகார் அளித்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, கோவில், சுயம்பு சாமி சிலைகள் மற்றும் சுற்று சுவரை, மர்ம நபர்கள் இடித்து தரைமட்டமாக்கி யுள்ளனர். நேற்று காலை இதையறிந்த கோவில் முன் திரண்டனர். கோவிலை இடித்த நபர்களை கைது செய்யவேண்டும், என கோரிக்கை விடுத்தனர். தகவல் அறிந்த சூலூர் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விசாரணை நடத்தினர். இதுகுறித்து கோவிலை சேர்ந்த பக்தர்கள் கொடுத்த புகாரின் பேரில், கோவிலை இடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
