/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொலை வழக்கு; இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
/
கொலை வழக்கு; இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
ADDED : மே 02, 2025 09:13 PM
கருமத்தம்பட்டி; கருமத்தம்பட்டி அருகே பங்க் ஊழியரை கொலை செய்த இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் காளிமுத்து, 46. கருமத்தம்பட்டி - அன்னூர் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தார். கடந்த, மார்ச், 23 ம்தேதி இரவு, பங்கிற்கு வந்த இரு லாரி டிரைவர்களுக்கும், காளிமுத்துவுக்கும் வாக்குவாதம் நடந்தது.
இதனால், ஆத்திரமடைந்த டிரைவர்கள் சரவணக்குமார், 27, மாரிமுத்து, 31 ஆகியோர், நள்ளிரவில், பங்கிற்கு சென்று, இரும்பு ராடால், காளிமுத்துவை அடித்து கொன்றனர். தப்பிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவர்கள் இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன், கலெக்டருக்கு பரிந்துரைத்தார்.
இதையடுத்து, இரு டிரைவர்கள் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய, கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.

