/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூதாட்டி கொலை; தொழிலாளிக்கு ஆயுள்
/
மூதாட்டி கொலை; தொழிலாளிக்கு ஆயுள்
ADDED : மார் 28, 2025 10:15 PM
கோவை; மூதாட்டி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கட்டட தொழிலாளிக்கு ஆயுள்சிறை விதிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், சேவுகம் பட்டியை சேர்ந்தவர் வினோத்,31. கோவை, தடாகம், கே.வடமதுரை பகுதியில் தங்கியிருந்து கட்டட வேலைக்கு சென்று வந்தார். அதே பகுதியில், 72 வயது மூதாட்டி தனியாக வசித்து வந்ததை அறிந்த வினோத் அடிக்கடி அவரது வீட்டுக்கு சென்று சகஜமாக பழகினார். கடந்த 2021, ஏப்., 16 ல், மூதாட்டி தனியாக இருந்த போது, வீட்டிற்குள் நுழைத்த வினோத் அவரை பாலியல் பலாத்காரம் செய்து, கத்தியால் குத்தி கொலை செய்தார். அவர் அணிந்திருந்த தங்க கம்மலை பறித்து தப்பினார்.
இது தொடர்பாக தடாகம் போலீசார் விசாரித்து வினோத்தை கைது செய்தனர். அவர்மீது,கோவை மகளிர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி நந்தினிதேவி, குற்றம் சாட்டப்பட்ட வினோத்திற்கு ஆயுள்சிறை விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் ஜிஷா ஆஜரானார்.….