ADDED : ஜூலை 21, 2023 12:21 AM
அ நிறம் | அளவு
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, தோட்டக்கலைத்துறை சார்பில் மானியத்தில் காளான் வளர்ப்பு குடில் பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு வட்டாரத்தில், 2023 - 24ம் ஆண்டிற்கான மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ், காளான் வளர்ப்பு குடில் அமைக்க, 50 சதவீதம் மானியத்தில், 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
காளான் வளர்ப்பு குடில் மானியம் பெற விவசாயிகள், https://www.tnhorticulture.tn.gov.in/tnhortnet/ என்ற வெப்சைட்டில் தங்களது பெயர், முகவரி, ஆதார் எண் போன்ற விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
அல்லது கிணத்துக்கடவு தோட்டக்கலை துறை அலுவலகத்தில் நேரில் வந்து விபரங்களை பதிவு செய்து கொள்ளலாம் என, தோட்டக்கலை உதவி இயக்குனர் பெருமாள்சாமி தெரிவித்தார்.
