
செய்முறை: காளானை நன்றாக கழுவி துடைத்து சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். ஒரு சிறு பாத்திரத்தில் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த்துாள், மிளகுத் துாள், கரம்மசாலா துாள் மற்றும் எலுமிச்சை பழச்சாறு கலந்து நன்றாக பேஸ்ட்டை போல் செய்து கொள்ளவும். சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள காளானை இந்த பாத்திரத்தில் உள்ள பேஸ்ட் கலவையில் சேர்த்து நன்றாக கிளறி, 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
பின்னர் மைதா மாவையும் மற்றும் அரிசி மாவையும் ஒன்றாக கலந்து வைத்துகொள்ள வேண்டும். இந்த மாவு கலவையை பாத்திரத்தில் உள்ள காளான் பேஸ்ட் கலவையின் மீது துாவி நன்றாக கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் காளானை சிறிது சிறிதாக போட்டு பொரித்தெடுக்கவும். காளானை பொன்னிறமாக வறுத்து எண்ணெய் வடியும் வரை ஒரு பாத்திரத்தில் வைக்கவும். பின்னர் ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு நன்றாக வெடித்ததும், அதில் சோம்பு போட்டு நன்றாக 10 நொடிகள் வதக்கவும். அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள பூண்டை சேர்த்து பொன்னிறமாகும் வரை இரண்டு நிமிடங்கள் வதக்கவும். பின்னர் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
இதில், வெங்காயத்தை சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும். உப்பு மற்றும் பொறித்து வைத்துள்ள காளானை சேர்த்து நன்கு பிரட்டவும். இறுதியாக ஒரு ஸ்பூன் மிளகுத்துாள்சேர்த்து தொக்கு பதத்திற்கு வந்ததும் ஒரு கொத்து கொத்தமல்லி இலைகளை துாவி இறக்கவும்.