ADDED : அக் 12, 2025 12:29 AM

செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும்,சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும். அதன் பின் அதில் அரைத்த சின்ன வெங்காய பேஸ்ட், கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வெங்காயத்தின் பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
அடுத்து அதில் அரைத்த தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்பு அதில் இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.பிறகு அதில் மஞ்சள் துாள், மிளகாய் துாள், மல்லித் துாள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பின்னர் அதில் கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். அதன் பின் அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும். கிரேவி நன்கு கொதித்து, சிக்கன் வெந்ததும், அதில் சீரகத் துாள் மற்றும் மிளகுத் துாள் சேர்த்து நன்கு கிளறி, இரண்டு நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும். இறுதியாக அதில் கொத்தமல்லி, புதினாவை சேர்த்து கிளறி இறக்கி, நெய் ஊற்றி கிளறினால், சுவையான மதுரை பெப்பர் சிக்கன் கிரேவி தயார்.