/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காளான் விதை உற்பத்தி பல்கலையில் பயிற்சி
/
காளான் விதை உற்பத்தி பல்கலையில் பயிற்சி
ADDED : ஜூலை 20, 2025 10:53 PM
கோவை; கோவை, வேளாண் பல்கலையில், பயிர் நோயியல் துறை சார்பில் காளான் வளர்க்க பயிற்சி அளிக்கப்படுகிறது.
மொட்டுக் காளான், சிப்பிக் காளான், பால் காளான், மருந்துக் காளான், உணவுக் காளான், நச்சுக் காளான், வெள்ளை மற்றும் வண்ணக் காளான்கள் உள்ளிட்ட காளானின் வகைகள் அவற்றை வர்த்தக ரீதியாகவும், வீட்டு உபயோகத்துக்கும் வளர்க்கும் தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, இன்று முதல் 23ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு காளான் விதை உற்பத்தி மற்றும் காளான் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு வரிகள் உட்பட ரூ.5,900 கட்டணம் செலுத்த வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு, 96294 96555 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.