ADDED : ஜன 22, 2025 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை, வெள்ளலூரில் உள்ள முத்தமிழ் சங்கம் சார்பில் முதலாமாண்டு விழா, தேவர்குல திருமண மண்டபத்தில் நடந்தது.
கவியரங்கம், கோல போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளித்தல், பட்டிமன்றம் நடந்தது. 'கற்கை நன்றே' எனும் புத்தகத்தை, கவிஞர் மாரியப்பன் வெளியிட்டார். வெள்ளலூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பாலன் மற்றும் ஆசிரியர்கள், நாச்சிமுத்து கவுண்டர் ருக்மணி அம்மாள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், வெள்ளாளபாளையம் துவக்க பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.