ADDED : மார் 29, 2026 03:59 AM

தேவையான பொருட்கள் n மட்டன் கால் கிலோ n தக்காளி 2 n ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் n இரண்டு ஸ்பூன் ஆயில் n தேவையான அளவு உப்பு n தண்ணீர் n 2 டீஸ்பூன் இஞ்சி, பூண்டு பேஸ்ட்
செய்முறை:
முதலில் நாம் போன்லெஸ் மட்டனை எடுத்து நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். அதனுடன் மிளகாய் தூள், இஞ்சி, பூண்டு பேஸ்ட், தக்காளி தேவையான அளவு உப்பு சேர்த்து, இவை அனைத்தும் கறியுடன் சேர்த்து நன்றாக கலக்கி வைத்து விடவும். தேவைப்பட்டால் புட் கலர் ஆட் பண்ணி கொள்ளலாம் ஒரு அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்
பிறகு குக்கரில் அல்லது மண் சட்டியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானவுடன், நாம் கலக்கி வைத்த கறியும் அந்த மசாலாவும் போட்டு நன்றாக கிளறி விடவும்.
பிறகு கறியின் மேல் தண்ணி ஊற்றி நன்றாக கிளறி உப்பு காரம் பார்த்துக் கொள்ளவும். மூடி போட்டு குக்கரில் 10 நிமிடம் வைக்கவும். மண்சட்டி என்றால், அரை மணி நேரம் வைக்கவும்.
தண்ணீர் அதிகமாக இருந்தால் சிறிது நேரம் அடுப்பில் வைத்து வற்றும் வரை விடவும். இது மிகவும் சுவையாக இருக்கும் தயிர் சாதம் ரசம் சாம்பார் இவை அனைத்துக்கும் மிகவும் சுவையாக இருக்கும்
