sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தியானலிங்கத்தை தரிசிக்க வேண்டும் என்ற ஏக்கம் நிறைவேறியது!

/

தியானலிங்கத்தை தரிசிக்க வேண்டும் என்ற ஏக்கம் நிறைவேறியது!

தியானலிங்கத்தை தரிசிக்க வேண்டும் என்ற ஏக்கம் நிறைவேறியது!

தியானலிங்கத்தை தரிசிக்க வேண்டும் என்ற ஏக்கம் நிறைவேறியது!


UPDATED : டிச 12, 2024 11:07 AM

ADDED : டிச 12, 2024 11:06 AM

Google News

UPDATED : டிச 12, 2024 11:07 AM ADDED : டிச 12, 2024 11:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை ஈஷா மையத்திற்கு ஆன்மீக பயணமாக 120 பேர் கொண்ட மாற்றுத் திறனாளிகள் குழு வருகை தந்தது. அங்கு நம்மை போன்றவர்களாலும் தியானலிங்கத்தை தரிசிக்க முடியுமா என்ற ஏக்கம் தற்போது நிறைவேறியதாக அவர்கள் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.

தமிழ்நாடு மாற்றத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் கோவை மாவட்ட அனைத்து வகை மாற்றத்திறனாளிகள் நலச்சங்கம் சார்பில் 120 பேர் ஈஷாவிற்கு வருகை புரிந்தனர். அவர்கள் சிரமங்கள் ஏதும் இல்லாமல் தரிசனம் செய்ய தேவையான சிறப்பு ஏற்பாடுகளை ஈஷா யோக மையம் செய்திருந்தது.

Image 1355655


ஈஷாவில் தியானலிங்கம், லிங்கபைரவி ஆகிய இடங்களில் நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு இலவச யோகா வகுப்புகளும் நடத்தப்பட்டன.

Image 1355656


இது குறித்து தவழும் மாற்றுத்திறனாளி பாஸ்கர் கூறுகையில், 'ஈஷா போன்ற பிரபலமான இடங்களுக்கு தவழும் மாற்றுத்திறனாளிகள் சென்று வருவது மிகவும் சிரமம் என்றே இதுவரை நினைத்திருந்தேன். பல முறை வெளியில் மட்டுமே நின்று வந்துள்ளேன். நம்மை போன்றவர்களால் தியானலிங்கத்தை பார்க்க முடியாதா என்று கூட பல முறை நினைத்து இருக்கிறேன்.

ஆனால் நேற்று ஈஷாவில் எங்களை அழைத்துச் சென்ற விதமும், அங்குள்ள ஆன்மீகப் பணியாளர்களின் தூய்மையான அன்பும், மிகவும் சிறப்பானதாக இருந்தது. எந்தவித சிரமமும் இல்லாமல் கோவிலின் அனைத்து இடங்களையும் எங்களுக்கு சுற்றிக்காட்டினர் என அவர் கூறினார்.

Image 1355657


பார்வை மாற்றுத்திறனாளியான மணிகண்டன் கூறுகையில், 'ஈஷா சென்று வந்த பயணம் மனத்திற்கு மிகவும் நிறைவானதாக இருந்தது. நாங்கள் கேட்ட வசதிகள் அனைத்தையும் ஈஷாவில் முழுமையாக ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. ஈஷா தன்னார்வலர்கள் எங்கள் மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளை மிகவும் சிறப்பாக வழி நடத்தினார்கள்.

Image 1355658


அவர்கள் அனைவருக்கும் கோவை மாவட்ட அனைத்து வகை மாற்றத்தினாளிகள் நலச்சங்கத்தின் சார்பிலும் எல்லோரது சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.' என அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us