/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மர்ம நோய் தாக்கி வளர்ப்பு; கோழிகள் இறப்பு
/
மர்ம நோய் தாக்கி வளர்ப்பு; கோழிகள் இறப்பு
ADDED : ஏப் 07, 2025 09:53 PM
மேட்டுப்பாளையம்; காரமடை அருகே மர்ம நோய் தாக்கி வளர்ப்பு கோழிகள் இறந்து வருவதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் காரமடை அருகே திம்மம்பாளையம் நரிக்குறவர் காலணியில் உள்ள பெரும்பாலான மக்கள் கோழிகள் வளர்த்து அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகின்றனர்.
இப்பகுதி மக்கள் வான்கோழி, வெண்மயில், நாட்டுக்கோழி உள்ளிட்ட பல்வேறு வகை கோழிகளை வளர்த்து, அதனை விற்பனை செய்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக அப்பகுதி மக்கள் வளர்த்து வரும் கோழிகளுக்கு கண், தலை வீக்கம், வாயில் எச்சில் ஒழுகுதல், உணவு உண்ணாமல் இருப்பது போன்ற அறிகுறிகளுடன் மர்ம நோய் தாக்கி கோழிகள் இறந்து வருகின்றன.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், “கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் நிறைய கோழிகள் இறந்துள்ளன. கால்நடை துறையினர் எங்கள் பகுதியில் ஆய்வு செய்ய வேண்டும். தற்போது நோய் தாக்கிய கோழிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றனர்.