/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போட்டோ ஸ்டுடியோவில் மர்ம நபர்கள் கைவரிசை
/
போட்டோ ஸ்டுடியோவில் மர்ம நபர்கள் கைவரிசை
ADDED : செப் 23, 2025 08:47 PM
பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி அருகே, மாக்கினாம்பட்டி அமர் ஜோதிநகரை சேர்ந்தவர் ஜானகிராமன்,48. இவர், பல்லடம் ரோட்டில் எஸ்.ஆர். லே-அவுட்டில், போட்டோகிராபி ஸ்டுடியோ நடத்தி வருகிறார். இங்கு, ஒன்பது பேர் வேலை செய்கின்றனர்.
நேற்று வழக்கம் போல, ஊழியர் ஹக்கீம் ஸ்டுடியோவை பூட்டி சாவியை, ஜன்னல் அருகே வைத்து சென்றார். நேற்று காலை ஊழியர் அலெக்சாண்டர் வந்து பார்த்த போது, ஜன்னல் அருகே இருந்த சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார்.
அப்போது, ஸ்டுடியோவில் இருந்த மூன்று லேப்டாப், ஏர் ட்ரோன் கேமரா, கேமரா ஆகியவை காணவில்லை என, உரிமையாளர் ஜானகிராமனுக்கு தெரிவித்தார். அவர் வந்து பார்த்த பின், மகாலிங்கபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.