sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 கோவை சைபர் கிரைம் போலீசுடன் மர்ம மனிதன்.. கண்ணாமூச்சி! . 17வது தடவையாக கலெக்டருக்கு குண்டு மிரட்டல்

/

 கோவை சைபர் கிரைம் போலீசுடன் மர்ம மனிதன்.. கண்ணாமூச்சி! . 17வது தடவையாக கலெக்டருக்கு குண்டு மிரட்டல்

 கோவை சைபர் கிரைம் போலீசுடன் மர்ம மனிதன்.. கண்ணாமூச்சி! . 17வது தடவையாக கலெக்டருக்கு குண்டு மிரட்டல்

 கோவை சைபர் கிரைம் போலீசுடன் மர்ம மனிதன்.. கண்ணாமூச்சி! . 17வது தடவையாக கலெக்டருக்கு குண்டு மிரட்டல்


ADDED : டிச 17, 2025 05:05 AM

Google News

ADDED : டிச 17, 2025 05:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கலெக்டர் அலுவலகத்துக்கு தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வரும் நபரை பிடிக்க, போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கோவையில் தனியார் பள்ளிகள், கல்லுாரிகள், தனியார் நிறுவனங்கள், விமான நிலையம் ஆகியவற்றுக்கு சில மாதங்களாக, தினமும் இ- மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

வெடிகுண்டு மிரட்டல் தகவல் அறிந்ததும், சில பள்ளிகளில் அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்பட்டது. பெற்றோர் இருக்கும் வேலையை எல்லாம் விட்டு விட்டு, அலறியடித்துச் சென்று, குழந்தைகளை பத்திரமாக வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

போலீசார் சோதனைக்குப் பின் புரளி என முடிவாவதும், மறுநாள் மீண்டும் மிரட்டல் விடுவதும் நடந்தது. ஒரு கட்டத்தில் பயம் விட்டுப் போய் விட, மிரட்டல் வருவதும் நின்று போனது.

மிரட்டல் விடுப்பதே விடுக்கிறோம்...மேல் மட்டத்தையும் ஒருகை பார்க்கலாம் என முடிவு செய்த மிரட்டல் நபர், இப்போதெல்லாம் கலெக்டர் ஆபீசுக்கு மட்டுமே இ- மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதை, வழக்கமாக மாற்றிக் கொண்டார்.

நேற்று, 17வது முறையாக கலெக்டர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இ- மெயிலுக்கு வந்த தகவலில், கலெக்டர் அலுவலகத்தில், மூன்று ஆர்.டி.எக்ஸ்., குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், மதியம் 1:00 மணிக்கு அவை வெடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வழக்கம் போல் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும், கலெக்டர் அலுவலகத்தில் மோப்பநாய், மெட்டல் டிடெக்டர் கருவிகள் உதவியுடன், சோதனை நடத்தினர். வழக்கம் போல் அது புரளி என்பது தெரிந்தது.

கலெக்டர் அலுவலகத்துக்கே தினமும் வெடிகுண்டு மிரட்டல் விடுவது, தொடர் கதையாகி வரும் நிலையில், போலீசாருக்கு கண்ணாமூச்சி காண்பிக்கும் அந்த கில்லாடி நபரை, போலீசார் தேடுகின்றனர்...தேடுகின்றனர்...தேடிக்கொண்டே இருக்கின்றனர்!






      Dinamalar
      Follow us