/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்வீட் கடையில் கொள்ளை மர்ம நபருக்கு வலை
/
ஸ்வீட் கடையில் கொள்ளை மர்ம நபருக்கு வலை
ADDED : ஜன 19, 2025 12:21 AM
கோவை : கோவை, சிங்காநல்லூர் வி.ஆர்.புரம், நேரு பூங்கா தெருவில் ஸ்வீட் கடை உள்ளது. கேரளாவை சேர்ந்த ரியாஸ், 38 என்பவர் கடையை நடத்தி வருகிறார். கடையின் அருகிலேயே உள்ள வீட்டில், ரியாஸ் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கடையை அவரது மனைவியின் சகோதரி அன்சாரியிடம் ஒப்படைத்துவிட்டு, ரியாஸ் கேரளாவுக்கு சென்றார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு, அன்சாரி ஓய்வெடுக்க சென்று விட்டார்.
அப்போது மர்மநபர், கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து அங்கு இருந்த பணம் ரூ.38 ஆயிரத்தை திருடி சென்றார்.
மறுநாள் காலை கடையை திறக்க சென்ற போது, இதை அறிந்த அன்சாரி, ரியாசுக்கு தகவல் தெரிவித்தார். ரியாஸ் புகாரின் பேரில், சிங்காநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து மர்மநபரை தேடி வருகின்றனர்.

