தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரியின் ஆண்டு விழா

 நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரியின் ஆண்டு விழா

 நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரியின் ஆண்டு விழா


ADDED : ஏப் 11, 2026 04:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2026 04:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரியின், 69வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு தின விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் அசோக், ஆண்டு அறிக்கையை படித்தார். உடற்கல்வி இயக்குனர் தேவராஜன், ஆண்டு விளையாட்டு அறிக்கையை வாசித்தார்.

கோவை சி.ஏ.டி.எஸ்., நிறுவன இயக்குனர் வேலாயுதம் பேசுகையில், 'மாணவர்கள், வாழ்க்கையில் வரும் சவால்களை சமாளிக்க மதிப்பெண்களை விட திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். வெற்றி பெற தொடர்ந்து முயற்சி செய்வது முக்கியமாகும். வளர்ச்சிக்கு திடமான அடித்தளம் மிகவும் அவசியம். உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் இலக்குகளை அடைய முடியும்,'' என்றார்.

கோவை ஸ்பார்க் டெக் நிறுவனர் ராஜேஷ்குமார் பேசுகையில், ''மாணவர்கள், தங்களுடைய திறமைகளை ஆராய்ந்து அறிதல் மிகவும் முக்கியமானது. வாழ்க்கையில் முன்னேற தெளிவான இலக்குகளை நிர்ணயிப்பது அவசியம். அந்த இலக்கை அடைய அதில் முழு கவனம் செலுத்துவதுடன், தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். கடினமாக உழைத்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்,'' என்றார்.

சிற்றுளி பவுண்டேஷன் நிறுவனர் குணசேகரன் பேசுகையில், ' 'மாணவர்கள் தங்களை ஆராய்ந்து பலவீனங்கள், திறமைகளை புரிந்து கொள்ள வேண்டும். சமுதாயத்துக்கு பயன்தரும் மாற்றத்தை உருவாக்க முயல வேண்டும். தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டு எந்த சூழலிலும் தைரியமாக முன்னேற வேண்டும்,'' என்றார். முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள், கல்லுாரி துறை தலைவர்கள், விரிவுரையாளர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us