/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட கைப்பந்து போட்டி நடுமலை கிளப் அணி வெற்றி
/
மாவட்ட கைப்பந்து போட்டி நடுமலை கிளப் அணி வெற்றி
ADDED : ஏப் 16, 2025 09:31 PM

வால்பாறை; வால்பாறையில் நடந்த, மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில், நடுமலை டி.டி.எப்.சி., ஸ்போர்ட்ஸ் கிளப் அணி வெற்றி பெற்றது.
வால்பாறை நகர தி.மு.க., சார்பில், தமிழக முதல்வர் பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவிலான கைபந்து போட்டி நடந்தது. நகராட்சி விளையாட்டு மைதானத்தில் நடந்த ஐவர் கைப்பந்து போட்டியில், பொள்ளாச்சி, உடுமலை, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த, 16 அணி வீரர்கள் கலந்து கொண்டனர்.
இறுதி போட்டியில், நடுமலை எஸ்டேட் என்.எம்.எல்., யுனைடெட் ஸ்போர்ட்ஸ் அணியும், நடுமலை எஸ்டேட் டி.டி.எப்.சி., ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் மோதின. இதில், நடுமலை எஸ்டேட் டி.டி.எப்.சி., ஸ்போர்ட்ஸ் கிளப் அணி அபாரமாக விளையாடி பரிசை தட்டி சென்றது. விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு, தி.மு.க., நகர செயலாளர் சுதாகர் பரிசு மற்றும் சுழற்wகோப்பையை வழங்கினார்.