/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நல்லட்டிபாளையம் பள்ளி நூற்றாண்டு விழா தீவிரம்
/
நல்லட்டிபாளையம் பள்ளி நூற்றாண்டு விழா தீவிரம்
ADDED : மார் 17, 2025 12:08 AM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், நூற்றாண்டு விழா வரும், 19ம் தேதி நடக்கிறது.
கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, 1925ல் துவங்கப்பட்டது. நூறு ஆண்டுகள் நிறைவடைந்ததால், நூற்றாண்டு விழா வரும் 19ம் தேதி நடக்கிறது.
மேலும், விழா அழைப்பிதழ் வழங்குதல், மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள், சிறப்பு விருந்தினர் கவுரவிக்கும் ஏற்பாடுகள் மற்றும் பள்ளியின் முன்பாக நுாற்றாண்டு விழா நுழைவுவாயில் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடக்கிறது.
விழா நாளில், நூற்றாண்டு சுடர், தொடர் ஓட்டம், நினைவு மரம் நடுதல், ஜோதி ஏற்றுதல் போன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி தலைமை ஆசிரியர் செல்விராணி கூறுகையில், 'பள்ளி நூற்றாண்டு விழா நடக்கவிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பள்ளியில் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை படித்துள்ளார். மேலும், அவர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க உள்ளார். இங்கு படித்த முன்னாள் மாணவர்கள் பலர் வருகை தர உள்ளனர்,' என்றார்.