/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நானோ தாவரவியல் களைக்கொல்லி; வேளாண் பல்கலைக்கு காப்புரிமை
/
நானோ தாவரவியல் களைக்கொல்லி; வேளாண் பல்கலைக்கு காப்புரிமை
நானோ தாவரவியல் களைக்கொல்லி; வேளாண் பல்கலைக்கு காப்புரிமை
நானோ தாவரவியல் களைக்கொல்லி; வேளாண் பல்கலைக்கு காப்புரிமை
ADDED : ஜூலை 22, 2025 10:53 PM
கோவை; தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கு, நானோ தாவரவியல் களைக்கொல்லி கண்டுபிடிப்புக்கான காப்புரிமையை, இந்திய அரசின் காப்புரிமை அலுவலகம் வழங்கியுள்ளது.
இயற்கை தாவர ரசாயனங்களில் இருந்து, புதிய களைக்கொல்லியை உருவாக்கியதற்காக இந்த காப்புரிமை வழங்கப்பட்டது. ஸ்வாதிகா, சுப்பிரமணியன், மாரிமுத்து ஆகிய ஆய்வாளர்கள், இந்த களைக்கொல்லியைக் உருவாக்கினர்.
அல்லெலோபதி கலவைகள் எனப்படும் இந்த ரசாயனங்கள், யூகலிப்டஸ் சிட்ரியோடோராவில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டன. இது, யூகலிப்டால் மற்றும் சிட்ரோனெல்லல் போன்ற பொருட்களை வெளியிடும் மரமாகும்.
இது, அருகிலுள்ள தாவரங்களின் வளர்ச்சியை இயற்கையாகவே அடக்குகிறது. இந்த ஆவியாகும் சேர்மங்களைப் பாதுகாக்க, ஆராய்ச்சிக் குழுவானது, நானோ தொழில்நுட்பத்தின் வாயிலாக, கொத்தவரையில் இருந்து எடுக்கப்பட்ட பிசினைப் பயன்படுத்தி, இந்த நானோ களைக்கொல்லியைத் தயாரித்துள்ளது.
இந்த நானோ களைக்கொல்லியானது, களைச் செடியின் விதைகள் முளைப்பதற்கு முன்னரும், களைச்செடி முளைத்த பின்னரும் கட்டுப்படுத்துகிறது.
இந்த களைக்கொல்லியை, நெல்வயல்களில் காணப்படும் முக்கிய களைச்செடியான குதிரைவாலி புல்களில் பயன்படுத்தியபோது, அவற்றை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியது.