/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'புத்துயிர் இயற்கை' திட்டம் வாலாங்குளத்தில் துவக்கம்
/
'புத்துயிர் இயற்கை' திட்டம் வாலாங்குளத்தில் துவக்கம்
'புத்துயிர் இயற்கை' திட்டம் வாலாங்குளத்தில் துவக்கம்
'புத்துயிர் இயற்கை' திட்டம் வாலாங்குளத்தில் துவக்கம்
ADDED : ஜூலை 22, 2025 10:53 PM

கோவை; சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், ரோட்டரி கோயம்புத்துார் சிட்டி சங்கம்,' புத்துயிர் - இயற்கை' எனும் திட்டத்தை, வாலாங்குளம் ஏரி அருகே ஹாக்கர்ஸ் சென்டரில் தொடங்கியுள்ளது. கலெக்டர் பவன்குமார் தொடங்கி வைத்தார்.
இதன் கீழ், பிளாஸ்டிக் பாட்டில்கள் சேகரிப்பு அமைப்புகள், கோவை நகரம் முழுவதும் ஏரிகள், காடுகள் மற்றும் பொது இடங்களில் நிறுவப்பட உள்ளன. சேகரிக்கப்படும் பாட்டில்களைக் கொண்டு டி - சர்ட், காலணிகள், பைகள் போன்ற மறுசுழற்சி பொருட்கள் தயாரிக்கப்படவுள்ளன.
நிகழ்வில், 'போதைப் பொருள் இல்லா கோவை' விழிப்புணர்வுடன் 'நோ பார்க்கிங்', இரும்புப் பதாகைகள் வெளியிடப்பட்டு, காவல் துறைக்கு ஒப்படைக்கப்பட்டது.
தொடர்ந்து, ரோட்டரி கோயம்புத்துார் சிட்டி கிளையின், 2025-26 புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு விழாவும் நடந்தது.
நிகழ்வில், சங்க தலைவர் சுரேஷ், செயலாளர் முருகன், திட்டத் தலைவர் கிருத்திகா, மாநகராட்சி உதவி பொறியாளர் ஹேமலதா, துணை ஆணையர் தேவநாதன், எழுத்தாளர் சதாசிவம், ரோட்டரி மாவட்ட ஆளுநர் 2026-27 தேர்தல் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி ஆகியோர் பங்கேற்றனர்.