ADDED : மே 11, 2025 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: குழந்தைகள் பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக, கோவை இஸ்கான் கோவிலில் இன்று நரசிம்ம ஜெயந்தி விழா நடக்கிறது.
பக்தனான குழந்தை பிரஹலாதனைக் காக்க, நரசிம்மர் அவதரித்ததை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் இஸ்கானில் இவ்விழா நடக்கிறது. பக்தி வினோத சுவாமி மகாராஜா நிகழ்வுகளை நடத்துகிறார்.
ஹோமம், 200 குழந்தைகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள், நரசிம்மர் அபிஷேகம், சொற்பொழிவு, நடனம், பக்தி இசை மற்றும் வினாடி வினா, சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.