/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாராயணசாமி நாயுடு நூற்றாண்டு விழா; விவசாயிகளுக்கு அழைப்பு பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு
/
நாராயணசாமி நாயுடு நூற்றாண்டு விழா; விவசாயிகளுக்கு அழைப்பு பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு
நாராயணசாமி நாயுடு நூற்றாண்டு விழா; விவசாயிகளுக்கு அழைப்பு பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு
நாராயணசாமி நாயுடு நூற்றாண்டு விழா; விவசாயிகளுக்கு அழைப்பு பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : பிப் 05, 2025 11:40 PM
கோவில்பாளையம்: வையம்பாளையத்தில் இன்று தமிழக விவசாயிகள் சங்க நிறுவனர் நாராயண சாமி நாயுடுவின் 100வது ஆண்டு பிறந்தநாள் விழா நடக்கிறது.
வையம்பாளையத்தை சேர்ந்தவர் நாராயணசாமி நாயுடு. 1925ம் ஆண்டு பிப். 6ம் தேதி பிறந்தார். இவரது நூறாவது ஆண்டு பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.
1957ல் கோவையில் பல ஆயிரம் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தி 16 மணி நேர மின்சாரத்தை பெற்று தந்தார். 1970ம் ஆண்டு மே 9ம் தேதி பல்லாயிரம் மாட்டு வண்டிகள் மற்றும் டிராக்டர்களுடன் போராட்டம் நடத்தி நகரை ஸ்தம்பிக்க வைத்தார். பல்வேறு போராட்டங்களை நடத்தி, விவசாயிகளுக்கு உரிமைகளை பெற்று தந்தார்.
கோவை கலெக்டர் கிராந்தி குமார் வெளியிட்டுள்ள அறிக்கை :
உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடுவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா வையம்பாளையத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில், செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், 6ம் தேதி (இன்று) காலை 9:00 மணிக்கு நடக்கிறது.
இதில் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் பங்கேற்று நாராயணசாமி நாயுடுவின் சிலைக்கு மாலை அணிவிக்கின்றனர். இவ்விழாவில் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். விழாவில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில், மணிமண்டபம் அருகே மாநில தலைவர் சின்னச்சாமி தலைமையில் 25க்கும் மேற்பட்ட அரங்குகளுடன் வேளாண் கண்காட்சி நடைபெறுகிறது. நூற்றாண்டு விழா மலர் வெளியிடப்படுகிறது.
விவசாயிகள் கண்காட்சியில் பங்கேற்று பயன்பெற சங்க நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.