/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய வில்வித்தை போட்டி; கோவை மாணவி தேர்வு
/
தேசிய வில்வித்தை போட்டி; கோவை மாணவி தேர்வு
ADDED : அக் 23, 2025 12:32 AM

கோவை: தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் பங்கேற்க, கோவை மாணவி தேர்வு பெற்றுள்ளார்.
இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பான, 'எஸ்.ஜி.எப்.ஐ.,' சார்பில், மாவட்ட அளவிலான வில்வித்தை போட்டி, கரூரில் நடந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற, கோவை சுந்தராபுரம் பிரசன்டேஷன் மேல்நிலைப் பள்ளியின் 6ம் வகுப்பு மாணவி தரங்கிணி வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார்.
சமீபத்தில், சென்னை நேரு ஸ்டேடியத்தில் மாநில அளவிலான போட்டி நடத்தப்பட்டது. மாணவி தரங்கிணி 3வது இடம் பெற்று, வாரணாசியில் வரும் நவ., மாதம் நடக்கும், தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளார். இவருக்கு, பெற்றோர், பள்ளி தலைமை ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.