தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அவினாசிலிங்கம் பல்கலைக்கு தேசிய விருது

அவினாசிலிங்கம் பல்கலைக்கு தேசிய விருது

அவினாசிலிங்கம் பல்கலைக்கு தேசிய விருது


UPDATED : அக் 30, 2026 05:29 PM

ADDED : அக் 30, 2026 05:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 30, 2026 05:29 PM ADDED : அக் 30, 2026 05:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: தமிழ்நாட்டின் சிறந்த பல்கலைக்கழகம் என்ற பிரிவில் அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்துக்கு,‘தேசத்தின் பெருமை விருது 2025 – மாநில தலைமைத்துவ கவுரவம்’ வழங்கப்பட்டுள்ளது.

'வெட்டரன்ஸ் இந்தியா' அமைப்பு, ஏ.ஐ.சி.டி.இ, என்.பி.ஏ, ஏ.ஐ.யு உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து நாடு முழுவதும் உள்ள 1,000க்கும் மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்து இந்த விருதை வழங்கியுள்ளது. பெண்களின் முன்னேற்றம், சமூகப் பொறுப்புணர்வு, மதிப்புசார் கல்வி மற்றும் தலைமைத்துவப் பண்புகளை மாணவியரிடம் வளர்ப்பதில் இந்நிறுவனம் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கீகாரம் நிறுவனத்தின் கல்வி மற்றும் சமூகப் பணிகளுக்கு மேலும் ஊக்கமளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தச் சாதனைக்கு உழைத்த பேராசிரியர்கள், மாணவியர், முன்னாள் மாணவியர் மற்றும் பணியாளர்களுக்கு நிறுவன நிர்வாகம் நன்றி தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us