/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசியளவிலான கூடைப்பந்து போட்டி; ஆக்ரோஷமாக விளையாடிய அணிகள்
/
தேசியளவிலான கூடைப்பந்து போட்டி; ஆக்ரோஷமாக விளையாடிய அணிகள்
தேசியளவிலான கூடைப்பந்து போட்டி; ஆக்ரோஷமாக விளையாடிய அணிகள்
தேசியளவிலான கூடைப்பந்து போட்டி; ஆக்ரோஷமாக விளையாடிய அணிகள்
ADDED : பிப் 17, 2025 11:17 PM

கோவை; ஸ்ரீ ஈஸ்வர் இன்ஜி., கல்லுாரியில் 'திறன்-25' எனும் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டி, மூன்று நாட்கள் நடந்தது.
இதில், ஆண்கள், பெண் கள் பிரிவில் தலா எட்டு அணிகள் பங்கேற்று, 'லீக்' மற்றும் 'நாக்-அவுட்' முறையில் விளையாடின. ஆண்களுக்கான முதல் அரையிறுதி போட்டியில், சென்னை எம்.சி.சி., அணி, 70-67 என்ற புள்ளி கணக்கில், பெங்களூரு ஜெயின் பல்கலை அணியை வென்றது.
இரண்டாம் அரையிறுதி போட்டியில், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி அணி, 54-41 என்ற புள்ளிகளில் சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை அணியை வீழ்த்தின.
இறுதிப்போட்டியில், எம்.சி.சி., அணி, 79-76 என்ற புள்ளி கணக்கில், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி அணியை வென்று, முதலிடம் பிடித்தது.
மூன்றாம் இடத்தை, சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலையும், நான்காம் இடத்தை ஜெயின் பல்கலை அணியும் பிடித்தன.
பெண்களுக்கான முதல் அரையிறுதியில், பி.எஸ்.ஜி., கல்லுாரி அணி, 64-41 என்ற புள்ளிகளில், சென்னை ஜே.பி.ஆர்., அணியையும், இரண்டாம் அரையிறுதியில் எம்.ஓ.பி., வைஷ்ணவி கல்லுாரி அணி, 87-43 என்ற புள்ளிகளில், எஸ்.ஆர்.எம்., பல்கலை அணியை வென்றது.
இறுதிப்போட்டியில், பி.எஸ்.ஜி., கல்லுாரி அணி, 63-56 என்ற புள்ளிகளில், எம்.ஓ.பி., கல்லுாரி அணியை வென்று, முதலிடம் பிடித்தது.
ஜே.பி.ஆர்., அணி மூன்றாம் இடத்தையும், எஸ்.ஆர்.எம்., அணி நான்காம் இடத்தையும் பிடித்த நிலையில், கல்லுாரி இயக்குனர் ராஜாராம், தலைவர் மோகன்ராம், முதல்வர் சுதா ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.

