/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய மாணவர் படை தின விழிப்புணர்வு பேரணி
/
தேசிய மாணவர் படை தின விழிப்புணர்வு பேரணி
ADDED : நவ 28, 2025 05:20 AM

கோவை: தேசிய மாணவர் படை தினத்தை முன்னிட்டு, போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக், மேல்நிலைப்பள்ளி நிர்வாகம் மற்றும் 2 டி.என்., ஆர்ட்டி பேட்டரி என்.சி.சி., இணைந்து பேரணியை நடத்தின.
பேரணியில், மாணவர்கள் விழிப்புணர்வு நோட்டீஸ்களை பொதுமக்களுக்கு வழங்கினர். கோவையின், 10 பள்ளிகள் மற்றும், 5 கல்லுாரிகளை சேர்ந்த, 400 மாணவர்கள் பேரணியில் பங்கேற்றனர். பேரணியின் முடிவில் போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு உரை வழங்கப்பட்டது.
பேரணியில் மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர். ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் துவங்கிய பேரணி எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி வழியாக 5 கி.மீ., மேற்கொள்ளப்பட்டது.

