/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய கிளைம்பிங் போட்டி; கோவை வீரர்கள் தேர்வு
/
தேசிய கிளைம்பிங் போட்டி; கோவை வீரர்கள் தேர்வு
ADDED : டிச 04, 2024 10:20 PM

கோவில்பாளையம்; கோவை வீரர்கள் மூன்று பேர், தேசியப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
பெங்களூரில், இந்தியன் மவுண்டைனரிங் பவுண்டேசன் அமைப்புடன் இணைந்து திம்மையா நேஷனல் அகாடமி ஆப் அட்வென்ச்சர் சார்பில், 28வது ஸ்போர்ட்ஸ் கிளைம்பிங் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதில் கோவையைச் சேர்ந்த கிளைம்ப் ஒன் ஸ்போர்ட் கிளைம்பிங் பயிற்சி மையத்திலிருந்து, இனியா பார்த்திபன், ஸ்பீடு கிளைம்பிங் போட்டியில், மிக இளையோர் பிரிவில், வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். தமிழகத்திலிருந்து, தேசிய அளவில் பங்கேற்பவர்களில் இவர் முதல் பெண் வீரர்.
இந்த சாம்பியன்ஷிப் போட்டியில், கோவையைச் சேர்ந்த தீப் சரண் இளையோர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். ஆர்யன் வெள்ளிப் பதக்கம் வென்றார். மூவரும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.