/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய ஜனநாயக கூட்டணி இமாலய வெற்றி பெறும்: பா.ஜ., தேசிய பொதுச்செயலாளர் பேட்டி
/
தேசிய ஜனநாயக கூட்டணி இமாலய வெற்றி பெறும்: பா.ஜ., தேசிய பொதுச்செயலாளர் பேட்டி
தேசிய ஜனநாயக கூட்டணி இமாலய வெற்றி பெறும்: பா.ஜ., தேசிய பொதுச்செயலாளர் பேட்டி
தேசிய ஜனநாயக கூட்டணி இமாலய வெற்றி பெறும்: பா.ஜ., தேசிய பொதுச்செயலாளர் பேட்டி
ADDED : ஜூலை 11, 2025 07:06 AM

அன்னுார்: 'சனாதன தர்மத்தை இழிவாகப் பேசுவோர், ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்படுவர்,' என, பா.ஜ., அகில இந்திய பொதுச்செயலாளர் அருண் சிங் அன்னுாரில் தெரிவித்தார்.
கோவை மாவட்டம், அன்னுாரில் பா.ஜ., அகில இந்திய பொதுச்செயலாளர், எம். பி., அருண் சிங், நிருபர்களுக்கு அளித்த பேட்டி :
நாட்டில் அனைத்து துறைகளிலும் முழுமையான வளர்ச்சி பெற வேண்டும். அனைத்து தரப்பினரும் வளம் பெற வேண்டும் என்பதற்காக உழைத்து வருகிறோம்.
இதற்காக குரு மகா சன்னிதானங்களிடம் ஆசி பெறுகிறோம். தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடைபெறுகிறது. தமிழகத்தில் ஆளும் கட்சியால் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்படுகிறது.
இந்து தர்மத்திற்கு எதிராக பேசி வந்த ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பதவியில் இருந்து விரட்டப்பட்டார். தமிழகத்தில் இந்து தர்மம், சனாதன தர்மம் மற்றும் இந்து மதத்திற்கு எதிராக பேசி வருவோர் ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்படுவர்.
தேசிய ஜனநாயக கூட்டணி வருகிற சட்டசபை தேர்தலில், இமாலய வெற்றி பெறும்.
எந்த ஒரு மதத்தையும் இழிவாக பேசக்கூடாது. அந்த மதத்திற்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும். ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பா.ஜ.,வின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
முன்னதாக கணேசபுரத்தில், பேரூர் ஆதீனம் மருத்துவமனையில், குரு பூர்ணிமாவை முன்னிட்டு, பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாரின் பாதங்களுக்கு பூஜை செய்து, வணங்கி, ஆசி பெற்றார். அடிகளார், அவருக்கு மாலை அணிவித்து, ஆசி அளித்து, பேரூர் மடம் குறித்த ஆங்கில புத்தகத்தை வழங்கினார்.
மருதாசல அடிகள் பேசுகையில், பேரூர் மடம் 500 ஆண்டுகள் பழமையானது. சைவத்துக்கும், தமிழுக்கும் தொண்டாற்றி வருகிறது. கோவிலுக்கு கூட செல்ல முடியாத மக்களுக்காக கிராமப்புறத்தில் சமய வகுப்புகள் நடத்தப்படுகிறது. நம் கலாச்சாரம், தர்மத்தை கற்பிக்க பல்கலைக்கழகம் துவக்க திட்டமிட்டுள்ளோம், என்றார்.
நிகழ்ச்சியில், பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், கோவை வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து, தஞ்சை தமிழ்ப் பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுப்பிரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.

