ADDED : நவ 13, 2024 07:26 AM
அ நிறம் | அளவு
நெகமம், : நெகமம் அருகே உள்ள, சின்னேரிபாளைம் சுவஸ்திக் மெட்ரி பள்ளியில், மவுலானா அபுல்கலாம் ஆசாத் பிறந்த நாளை முன்னிட்டு, தேசியக் கல்வி தினம் கொண்டாடப்பட்டது.
பள்ளி தாளாளர் தீபாகாந்தி தலைமை வகித்தார். துணை முதல்வர் மோகன்ராஜ், மவுலானா அபுல்கலாம் ஆசாத் கல்வி அமைச்சராக இருந்த போது இந்தியக் கல்வித்துறையில் கொண்டு வரப்பட்ட மாற்றங்கள், அவருடைய அரசியல் பயணம், விடுதலைப் போராட்டத்தில் அவருடைய பங்கு மற்றும் சுயசரிதை குறித்து விளக்கிப் பேசினார். இதற்கான ஏற்பாடுகளை, ஆசிரியர்கள் சவிதா, தமிழ்வாணி உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.
