/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய விவசாயிகள் தின உறுதிமொழி ஏற்பு
/
தேசிய விவசாயிகள் தின உறுதிமொழி ஏற்பு
ADDED : டிச 24, 2024 07:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தேசிய மனித மேம்பாட்டு மையம் மற்றும் கேலக்ஸி ரோட்டரி சங்க சமுதாய குழு இணைந்து பல்வேறு விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகின்றன.
நேற்று தேசிய விவசாயிகள் தினத்தை ஒட்டி இம்மையத்தில் 'மனித வாழ்வும், விவசாயமும்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இதில், விவசாயம் செழிக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கினர். பின்னர், அனைவரும் ஒருங்கிணைந்து உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை தேசிய மனித மேம்பாட்டு மைய இயக்குனர் சகாதேவன் செய்து இருந்தார்.