/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.எப்., ஊழியர்களுக்கான தேசிய கால்பந்து போட்டி
/
பி.எப்., ஊழியர்களுக்கான தேசிய கால்பந்து போட்டி
ADDED : ஜன 08, 2025 11:41 PM

போத்தனூர்; கோவையில் வருங்கால வைப்பு நிதி ஊழியர்களுக்கான, தேசிய அளவிலான கால்பந்து போட்டி நடந்தது.
மதுக்கரையை அடுத்து, எட்டிமடையிலுள்ள அமிர்தா பல்கலை வளாகத்தில், கோவை அமிர்தா விஷ்வ வித்யா பீடத்தின் வளாக இயக்குனர் சதீஷ் மேனன், போட்டியை துவக்கி வைத்தார். முதல் ஆட்டத்தில் குஜராத், ஹரியானா அணிகள் மோதின.
இதில் குஜராத் அணியின் அபிலாஷ் நாயர், 33 மற்றும் கிருஷ்ணன், 45வது நிமிடங்களில் கோல் அடித்தனர். ஹரியானா அணியினர் இறுதி வரை முயன்றும், கோல் அடிக்க இயலவில்லை. இதையடுத்து குஜராத் அணி, 2 -- 0 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இரண்டாவது ஆட்டத்தில் தமிழ்நாடு, குஜராத் அணிகள் மோதின. துவக்கத்திலிருந்தே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர், தமிழ்நாடு அணி வீரர்கள். இதன் பலனாக ஒன்பதாவது, 30வது நிமிடங்களில், ஆன்டனி சேவியர் கோல் அடித்தார்.
24வது நிமிடத்தில் ஹரிஹரன், 27ல் பிரதீப்குமாரை தொடர்ந்து வேதமாணிக்கம் ஆகியோரும் கோல் அடித்தனர். குஜராத் அணியினர் இறுதி வரை முயன்றும், கோல் அடிக்க முடியவில்லை. இதையடுத்து தமிழ்நாடு, 5 -- 0 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

