/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஞ்சாப் மாநிலத்தில் தேசிய கால்பந்து போட்டி; கோல் அடிக்க இன்று புறப்படுகிறது தமிழக அணி

ADDED : ஜூலை 16, 2025 10:46 PM
கோவை; தேசிய ஜூனியர் கால்பந்து போட்டி பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் வரும், 20ம் தேதி துவங்குகிறது. இந்த முறை, தமிழ்நாடு ஜூனியர் அணி வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து, தயார்படுத்த கோவை மாவட்ட கால்பந்து சங்கத்துக்கு, பொறுப்பு வழங்கப்பட்டது.
அதன்படி, கடந்த 4ம் தேதி முதல், 16ம் தேதி வரை ஈச்சனாரியில் உள்ள ரத்தினம் கல்லுாரி கால்பந்து மைதானத்தில் அணி வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. முகாமில் கோவை, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 40 வீரர்கள் பங்கேற்றனர்.
முதல் மூன்று நாள் முகாமில் இவர்களில் இருந்து, 28 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து நடந்த முகாமில் இந்த, 28 வீரர்களில் இருந்து தனித்திறமை அடிப்படையில், 22 பேர் தேர்வு செய்யப்பட்டு, சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த அணி, இன்று பஞ்சாப் புறப்படுகிறது. தொடர்ந்து, வரும், 21ம் தேதி மேற்கு வங்கத்துக்கு எதிராகவும், 23ம் தேதி கேரளாவுக்கு எதிராகவும், 25ம் தேதி மேகாலயாவுக்கு எதிராகவும் தமிழக அணி விளையாடவுள்ளது.
பஞ்சாப் கிளம்பிய தமிழக அணி வீரர்களுக்கு, மாவட்ட கால்பந்து சங்க தலைவர் மதன் செந்தில், செயலாளர் அனில்குமார் ஆகியோர் போட்டிக்கான உபகரணங்களையும், சீருடைகளையும் வழங்கினர். உணவு, தங்கும் இடம், டிராக் சூட் உட்பட அனைத்து வசதிகளும் வீரர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.