ADDED : மே 05, 2025 10:57 PM
அ நிறம் | அளவு
பெ.நா.பாளையம்; கவுண்டம்பாளையத்தில் தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் நடந்தன.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்து விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். காலை, 9:00 மணிக்கு போட்டிகள் தொடங்கின. தொடர்ந்து, புள்ளிகளின் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள், பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
வேலூர் ஈ.வி.எஸ்., சிலம்பம் அகாடமி முதலிடமும், சரவணம்பட்டி முல்லை சிலம்பம் இரண்டாம் இடமும், கோவை வடவள்ளி பீஷ்மர் குருகுலம் அணி அதிக புள்ளிகளை பெற்று, சிறப்பு கோப்பை தட்டி சென்றது.
போட்டிகளை மாயோன் வீர கலைக்கூடத்தின் தலைமை ஆசான் சக்திவேல் மற்றும் மணிகண்டன் ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்தினர்.
