/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய ஜிம்னாஸ்டிக் எட்டு பேர் தேர்வு
/
தேசிய ஜிம்னாஸ்டிக் எட்டு பேர் தேர்வு
ADDED : அக் 11, 2024 12:45 AM

கோவை : தேசிய ஜிம்னாஸ்டிக் போட்டியில் பங்கேற்க, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கோவை மையத்தில் பயிற்சி பெற்ற, மாணவ, மாணவியர் எட்டு பேர் தேர்வாகியுள்ளனர்.
கொல்கத்தாவில், வரும் டிசம்பர் மாதம், தேசிய ஜிம்னாஸ்டிக் போட்டி நடக்கிறது. இதில் பங்கேற்பதற்கான தகுதி தேர்வு, ஈரோடு கரட்டுப்பாளையம் அரசுப் பள்ளியில், இரு நாட்களுக்கு முன் நடந்தது. இதில், தமிழகம் முழுவதும் இருந்து 120 பேர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கோவை மையத்தில் பயிற்சி பெற்ற 15 பேர் பங்கேற்றனர். இதில், கோவை மாநகராட்சி பள்ளியை சேர்ந்த ரியாஸ்ரீ, ரேச்சல், சரண் பிரியா, ஸ்டேன்ஸ் பள்ளியின் பாகித் அகமத், ஜாய் ஆன்ட்ரியா, அவிலா கான்வென்டை சேர்ந்த அக் ஷரா, சபர்பன் பள்ளியின் மோனிகா, மவுனேஷ் ஆகியோர் வெற்றி பெற்று, தேசிய போட்டிக்கு தேர்வாயினர்.
இவர்கள் மற்றும் பயிற்சியாளர் சையத் இப்ராஹிம் ஆகியோரை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய, மண்டல முதுநிலை மேலாளர் அருணா, மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆனந்தன் ஆகியோர் பாராட்டினர்.

