/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய ஹேக்கத்தான் போட்டி: வேளாண் பல்கலை 3வது இடம்
/
தேசிய ஹேக்கத்தான் போட்டி: வேளாண் பல்கலை 3வது இடம்
ADDED : அக் 13, 2025 01:28 AM
கோவை:மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் மற்றும், இந்திய வனவிலங்கு நிறுவனம் சார்பில், மனித - வனவிலங்கு நல்லிணக்கம் தொடர்பாக, தேசிய அளவில் ஹேக்கத்தான் போட்டி நடந்தது.
இதில், தமிழ்நாடு வேளாண் பல்கலை அணி, 3வது இடம் பிடித்தது. நாடு முழுதும் அதிகரித்து வரும் மனித -வனவிலங்கு முரண்பாடுகளுக்கான தீர்வுகளை முன்வைக்கும் வகையில், இப்போட்டி அமைந்திருந்தது. சூரியசக்தி அடிப்படையில், சென்சார்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்துக்காக, வேளாண் பல்கலைக்கு விருது வழங்கப்பட்டது.
மத்திய வனத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் விருதை வழங்கினார். வெற்றி பெற்ற அணியினரை, பல்கலை துணைவேந்தர் (பொ), டீன் ரவிராஜ், பேராசிரியர்கள் வாழ்த்தினர்.