/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாண் பல்கலையில் பிஹெச்.டி., சேர்க்கை
/
வேளாண் பல்கலையில் பிஹெச்.டி., சேர்க்கை
ADDED : அக் 13, 2025 01:27 AM
கோவை:கோவை வேளாண் பல்கலையில், முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் முனைவர் பட்ட ஆய்வுகளுக்கான சேர்க்கை துவங்கியுள்ளது. வரும் நவ., 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண் பல்கலையில், 34 துறைகளில் முதுநிலைப் படிப்புகளும், 29 துறைகளில் முனைவர் பட்ட ஆய்வுகளும் வழங்கப்படுகின்றன.
2025--26ம் கல்வியாண்டுக்கான முதுநிலை மற்றும் முனைவர் பட்ட சேர்க்கை துவங்கியுள்ளது. https://admissionsatpgschool.tnau.ac.in வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
மத்திய, மாநில வேளாண் பல்கலைகள், ஐ.சி.ஏ.ஆர்., நிறுவனங்கள், அரசு உதவி பெறும் வேளாண் கல்லூரிகளில் ஏற்கனவே இளநிலை, முதுநிலை படிப்பை முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தற்போது இறுதியாண்டு இறுதிப்பருவம் பயிலும் மாணவர்களும், முந்தைய பருவ மதிப்பெண் சான்றிதழ்களை பதிவேற்றி விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு, 94890 56710 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.