ADDED : செப் 13, 2026 06:43 PM
அ நிறம் | அளவு
நவஇந்தியா: ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லுாரி மற்றும் ஐ.பி.எம்., நிறுவனம் சார்பில், தேசிய ஹேக்கத்தான் போட்டியை நடத்தின.
கல்லுாரி முதல்வரும், செயலருமான சிவக்குமார், ஐ.பி.எம்., நிறுவன இந்திய மேலாளர் ஜெகதிஷா பட் போட்டியை துவக்கி வைத்தனர். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.
இறுதிப் போட்டியில் ஒடிசா ஸ்ரீ ஸ்ரீ பல்கலை, ஜார்க்கண்ட் மத்திய பல்கலை மற்றும் ஆர்கா ஜெயின் பல்கலை அணிகள், முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தன.
எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர், வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
