/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம்; கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு
/
தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம்; கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு
தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம்; கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு
தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம்; கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு
ADDED : மே 15, 2025 11:43 PM
அன்னுார்; இன்று (16ம் தேதி) நடைபெற இருந்த கருத்து கேட்பு கூட்டம் வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கோவை-சத்தி தேசிய நெடுஞ்சாலையில், நான்கு வழி பசுமை சாலை அமைக்க 786 ஏக்கர் நிலம் கையகப்படுத்த 630 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நில உரிமையாளர்களுக்கு 3 ஏ நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு ஆட்சேபனை தெரிவித்து, கோவை மாவட்டத்தின் 14 வருவாய் கிராமங்களை சேர்ந்தவர்களும், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு வருவாய் கிராமங்களைச் சேர்ந்த 409 பேர் கோவையில் உள்ள மாவட்ட நில எடுப்பு அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர்.
இதை அடுத்து ஆட்சேபனை மனு அளித்தவர்களிடம் விசாரணை நடத்தும் கூட்டம் அன்னுார் தாலுகா அலுவலகத்தில் கடந்த 14ம் தேதி மூன்று வருவாய் கிராமங்களுக்கு நடந்தது. இதையடுத்து, கொண்டையம் பாளையம், குப்பேபாளையம், காட்டம்பட்டி, கரியாம்பாளையம் வருவாய் கிராமங்களை சேர்ந்து 98 பேருக்கு இன்று (16ம் தேதி) காலை 10:30 மணிக்கு அன்னுார் தாலுகா அலுவலகத்தில் விசாரணை நடைபெறும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
'எனினும் தவிர்க்க முடியாத காரணத்தால் இன்று நடைபெற இருந்த கருத்து கேட்பு கூட்டம் வரும் 26ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்து 19 மற்றும் 23ம் தேதி நடைபெற உள்ள கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்,' என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.