/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய புத்தொழில் தின கொண்டாட்டம்
/
தேசிய புத்தொழில் தின கொண்டாட்டம்
ADDED : ஜன 15, 2026 05:04 AM
கோவை: பிரதமர் மோடியின் அறிவுறுத்தல்படி, வேளாண் பல்கலையில் உள்ள தொழில்நுட்ப வணிகக் காப்பகத்தில் தேசிய புத்தொழில் தினம் கொண்டாடப்பட்டது.
வேளாண் வணிக மேம்பாட்டு இயக்கக இயக்குனர் சோமசுந்தரம் பேசுகையில், ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு, தொழில்நுட்ப வணிகக் காப்பகமானது தொழில்நுட்பம் உள்கட்டமைப்பு மற்றும் நிதியுதவி வழங்கி ஊக்குவிப்பது தொடர்பாக விளக்கினார். தொழில்நுட்ப வணிகக் காப்பக சி.இ.ஓ., ஞானசம்பந்தம், வணிக காப்பகம் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், முனைப்புகள் குறித்து விளக்கினார்.
வேளாண் இணை இயக்குனர் தமிழ்செல்வி, மாவட்ட தொழில் மைய துணை இயக்குனர் ராஜேஷ்வரி, நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் திருமலா ராவ், பல்கலை இயக்குநர்கள், துறைத்தலைவர்கள் பங்கேற்றனர்.

