தேசிய ஒருமைப்பாடு முகாம் திருப்பூர் மாணவர் தேர்வு
தேசிய ஒருமைப்பாடு முகாம் திருப்பூர் மாணவர் தேர்வு
ADDED : பிப் 06, 2026 05:27 AM
- நமது நிருபர் -:
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம், பெரியார் பல்கலை என்.எஸ்.எஸ். சார்பில் சேலம், சங்ககிரி விவேகானந்தா பெண்கள் கலை அறிவியல் கல்லுாரியில் நேற்று முதல் வரும் 11ம் தேதி வரை ஏழு நாட்கள் தேசிய ஒருமைப்பாடு முகாம் நடக்கிறது.
தமிழகம் உள்பட 12 மாநில என்.எஸ்.எஸ். மாணவ, மாணவியர் மொத்தம் 200 பேர் கலந்து கொள்கின்றனர். பாரதியார் பல்கலை சார்பில் ஆறு மாணவ, மாணவியர் கலந்து கொள்கின்றனர்.
அதில் ஒருவராக, திருப்பூர் சிக்கண்ணா அரசுக்கல்லுாரி விலங்கியல் துறை மாணவர் முகுந்தன் தேர்வாகியுள்ளார். இவர் ஒருவர் மட்டுமே திருப்பூர் மாவட்டத்தையும் அரசுக்கல்லுாரியையும் சேர்ந்தவர்.
இவரை, பாரதியார் பல்கலை என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி, கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், அலகு 2 திட்ட அலுவலர் மோகன்குமார், பேராசிரியர்கள் மற்றும் என்.எஸ்.எஸ். மாணவ, மாணவியர்கள் வழியனுப்பி வைத்தனர்.
